மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக சந்தனம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

முன்னதாக பாலிவுட்டில் களமிறங்கிய விஜய் சேதுபதி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள நிலையில், தொடர்ந்து கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் படத்திலும், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி நடித்துள்ள 19(1)(a) எனும் மலையாள திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து சில தினங்களுக்கு முன் வெளிவந்த மாமனிதன் திரைப்படம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் மாமனிதன் திரைப்படத்தின் ஏ ராசா வீடியோ பாடல் தற்போது வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…