திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு ரசிகர்களுக்கு வெரைட்டியான திரைப்படங்களை விருந்து வைக்கும் இயக்குனர் பார்த்திபனின் இயக்கத்தில் அடுத்த சாதனை முயற்சியாக தயாராகியுள்ள  இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie) திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் தயாராகியுள்ளது. இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர், பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடுகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரவின் நிழல் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து பேஜாரா வீடியோ பாடல் தற்போது வெளியானது. அசத்தலான அந்த வீடியோ பாடல் இதோ…