தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே முதல் முறையாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் உடன் இணைந்த விஜய் தேவர்கொண்டா குத்து சண்டை வீரராக நடித்த திரைப்படம் லைகர். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ள லைகர் படத்தில், ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் ஆகியோருடன் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில், பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க, மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். 

லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் மேக்கிங் புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Making Stills of #LIGER 🔥

15 Days to Go for the Mass Action Entertainer#LigerOnAug25th 💥@TheDeverakonda @ananyapandayy #PuriJagannadh @karanjohar @Charmmeofficial @IamVishuReddy @DharmaMovies @PuriConnects pic.twitter.com/wL02ZJWpzc

— Vamsi Kaka (@vamsikaka) August 10, 2022