சினிமாவில் நடிகராக அறிமுகமான சமயத்தில் உருவ கேலி செய்யப்பட்டு அதிக விமர்சனத்திற்கு உள்ளான போதும் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் உலக அளவில் மிக முக்கிய நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ், நடிப்பில் அடுத்தடுத்து வாத்தி நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
 
இதனிடையே யாரடி நீ மோகினி வேலையில்லா பட்டதாரி வரிசையில் தனுஷ் நடிப்பில் அடுத்த ஜாலியான திரைப்படமாக தயாராகியிருக்கிறது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து வெளிவந்த தாய்க்கிழவி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி சூப்பர் ஹிட்டானது.  

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடகர் திருமூர்த்தி தனக்கே உரித்தான பாணியில் பிளாஸ்டிக் குடத்தில் தாளம் போட்டபடி பாடல்களைப் பாடுவதும், அது சமூக வலைதளங்களில் வைரலாவதும் வழக்கம். முன்னதாக விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை மாற்றுத்திறனாளியான பாடகர் திருமூர்த்தி பாடி வெளியிட்ட வீடியோ மிகவும் ட்ரெண்ட் ஆனது.

இதனை அடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திருமூர்த்தியை நேரில் சந்தித்து பாராட்டியதோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியிலும் திருமூர்த்தியை சேர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷின் தாய்க்கிழவி பாடலை திருமூர்த்தி பாடும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Singer #Thirumoorthi's exceptional #ThaaiKelavi performance 🔥@dhanushkraja @anirudhofficial @sunpictures #Dhanush #Anirudh #Thiruchitrambalam pic.twitter.com/O5ZwxDPyw9

— Galatta Media (@galattadotcom) August 10, 2022