தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ப்ரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு(2022) தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதனிடையே இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார்.

முன்னதாக கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த நிறைவு விழாவில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி ஒட்டுமொத்த அரங்கில் உள்ள மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
 

#JUST_IN : செஸ் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் "ஆராதனா" ! #GalattaNews 📢@Siva_Kartikeyan #Sivakarthikeyan #AaradhanaSivaKarthikeyan pic.twitter.com/Qad7mZDugq

— Galatta Media (@galattadotcom) August 9, 2022