மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக உயர்ந்து இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். மேலும் கண்ஸ் அண்ட் குலாப் எனும் வெப்சீரிஸ் லும் துல்கர் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் பால்கி இயக்கத்தில் நடித்துள்ள CHUP-REVENGE OF THE ARTIST திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. இதனிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் சீதா ராமம் திரைப்படம் சில தினங்களுக்கு முன் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. 

துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்துள்ள சீதா ராமம் படத்தில் ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் சீதா ராமம் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்க, தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில்  ரொமான்டிக்கான காதல் திரைப்படமாக வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளது.

பல மொழி ரசிகர்களும் சீதா ராமம் திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, சீதா ராமம் படக்குழுவினர் தற்போது புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். சீதா ராமம் திரைப்படத்தின் அந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.