தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து பலவிதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. அந்த வகையில் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேஜாவு திரைப்படமும் க்ரைம் த்ரில்லர் படமாக அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

இதனையடுத்து இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான கெட்டப்பில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் புதிய படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இந்த புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். 

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் டைரி. இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதியுடன் இணைந்து பவித்ரா கதாநாயகியாக நடிக்கும் டைரி படத்தில் ஆடுகளம் கிஷோர், ஜெயப்பிரகாஷ் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அருள்நிதியின் திரைப்பயணத்தில் மற்றுமொரு த்ரில்லர் திரைப்படமாக FIVE ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் அவர்கள் தயாரித்துள்ள டைரி திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ள, டைரி திரைப்படத்திற்கு ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்ய, ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அருள்நிதியின் டைரி திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. டைரி திரைப்படத்தின் அந்த விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ இதோ…
 

Connecting the dots from an unsolved old case to a current crime opens up more challenges. #Diary 🚍📕is one such haunting thriller. Releasing in theatres on August 26th!#DiaryFromAug26@arulnithitamil @innasi_dir @kathiresan_offl @RedGiantMovies_ @AravinndSingh @RonYohann pic.twitter.com/YOHNWwQJwA

— Five Star Creations LLP (@5starcreationss) August 10, 2022