தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் தேவர் கொண்டா அடுத்ததாக தெலுங்கு திரை உலகின் நட்சத்திர இயக்குனரான இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராக உள்ள JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

முன்னதாக விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் குஷி திரைப்படமும் தயாராகி வருகிறது. இதனிடையே முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. 

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில், அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார். 

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் தனிஷ்க் பக்ச்சி பாடல்களுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்நிலையில் லைகர் திரைப்படத்திலிருந்து COKA எனும் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. துள்ளலான அந்த பாடல் வீடியோ இதோ…