தமிழ் சினிமாவின் ஃபேவரட்டான செலிபிரிட்டி ஜோடிகளில் ஒன்றாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படமாக்கப்பட்ட இவர்களது இந்த காதல் திருமண நிகழ்வு விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் முறையாக அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் முன்னதாக சமீபத்தில் சென்னையில் நடந்துமுடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிகழ்ச்சிகளை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல், தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா ஆகியவற்றை மிகச் சிறப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வெளிநாடு புறப்பட்டுள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது பார்சிலோனா செல்கின்றனர். இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் விமானத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, "தொடர்ந்து வேலை வேலை வேலை என இருந்தாகிவிட்டது... எனவே இப்போது எங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கொள்கிறோம்!" குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா-விக்னேஷ் அவனின் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)