தமிழ் திரை உலகில் இன்றியமையாத இசையமைப்பாளராக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பல ஃபேவரட் பாடல்களை கொடுத்து இசை ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை ஒரு தனி போதை தான். அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்களை போதையில் திக்குமுக்காட வைக்க யுவனின் இசையில் வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக யுவன் இசையில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 12) வெளியானது. தொடர்ந்து விஷாலின் லத்தி, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள புதிய படம், இயக்குனர் பிரதீப் ரங்கனதனின் லவ் டுடே ஆகிய படங்கள் யுவன் இசையில் அடுத்தடுத்து வரிசையாக வெளிவரவுள்ளன.

மேலும் இயக்குனர் அமீரின் இறைவன் மிகப்பெரியவன், குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கும் மிஸ்டர்.ஸூ கீப்பர், சரத்குமார் மற்றும் அமிதாஷ் இணைந்து நடிக்கும் பரம்பொருள் ஆகிய திரைப்படங்களும் யுவன் இசையில் தயாராகி வருகின்றன. இதனிடையே யுவன் ஷங்கர் ராஜா அவ்வபோது தனது இசை நிகழ்ச்சிகள் வாயிலாக நேரடியாக ரசிகர்களை சந்தித்து இசை மழையை பொழிந்து வருகிறார்.

அந்த வகையில் சென்னையில் கோலாகலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை விருந்து அரங்கேற உள்ளது. அரைஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் U & I ❤ எனும் இந்த சென்னை இசை நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

U & I ❤️

Live Concert in #Chennai
Sept 10th at Nehru Indoor Stadium

Organised by Arise Entertainment@U1Records pic.twitter.com/axFAetPRdx

— Raja yuvan (@thisisysr) August 11, 2022