தனக்கே உரித்தான ஸ்டைலில் பல படங்களில் நடித்து பல கோடி ரசிகர்களின் FAVOURITE ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்TR நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன் மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

தற்சமயம் பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)