தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் காமெடியனாக திகழ்ந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக அமைந்தது. சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் இவ்வுலகை விட்டு பிரிந்த நடிகர் விவேக் அவர்களின் மறைவை இன்றும் பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடைசியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாரான இந்தியன்2 திரைப்படத்தில் முதல்முறையாக உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து பணியாற்றி வந்தார் நடிகர் விவேக். இந்தியன் 2 திரைப்படம் இன்னும் நிறைவடையாத நிலையில் நடிகர் விவேக் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நகைச்சுவையின் வாயிலாக நல்ல பல கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்த விவேக் அவர்களின் மறைவுக்குப் பின்னர், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் வெளியானது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு விவேக் அவர்கள் நடித்த தி லெஜண்ட் திரைப்படமும் வெளியானது.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்த தி லெஜண்ட் படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தி லெஜண்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், லெஜண்ட் சரவணன் அவர்கள் தி லெஜண்ட் படத்தின் படப்பிடிப்பின்போது விவேக் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “மறக்கமுடியாத நினைவுகள்” என குறிப்பிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Memorable Moments with PadmaShri @Actor_Vivek during #TheLegend Shoot#TheLegendRunningSuccessfully #WeMissYouVivekSir pic.twitter.com/3Ry8no86Q8

— Legend Saravanan (@yoursthelegend) August 12, 2022