இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என தமிழ் திரையுலகில் கலக்கி வரும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் ரிலீஸாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக காக்கி, தமிழரசன், அக்னிச் சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வெளிவர உள்ளன.

மேலும் இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை,தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

தொடரந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் வள்ளி மயில். 

விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ், ஃபரியா அப்துல்லா மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வள்ளி மயில் படத்தில், தெலுங்கு நடிகர் சுனில், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி நிஷா மற்றும் யூட்யூப் பிரபலமான GP.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் வள்ளி மயில் படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வள்ளி மயில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. கவனத்தை ஈர்க்கும் வள்ளி மயில் ஃபர்ஸ்ட் லுக் இதோ…
 

vijay antony,actor vijay antony,music director vijay antony,vijay antony in vallimayil,vijay antony next movie,vijay antony next movie with suseenthran,suseendhiran,director suseendhiran,vallimayil,vallimayil movie,sunil,redin kingsley,d imman,sathyaraj,bharathi raja