தமிழ் திரை உலகின் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞரான T.ராஜேந்தர் அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து T.ராஜேந்தர் அவர்களுக்கு முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதில் T.ராஜேந்தர் அவர்களின் வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதற்கான தீவிர சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில்  T.ராஜேந்தர் அவர்கள் நலமுடன் இருப்பதாக நடிகர் சிலம்பரசன்.TR அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை அடுத்து T.ராஜேந்தர் அவர்களின் அடுத்தகட்ட உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. 

T.ராஜேந்தர் அவர்களின் இந்த உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் நடிகர் சிலம்பரசன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இதற்கான ஏற்பாட்டினை முழுவீச்சில் செய்தனர். இந்நிலையில் இன்று ஜூன் 14ஆம் தேதி T.ராஜேந்தர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். இன்று மாலை அமெரிக்கா செல்லும் முன்பு பத்திரிகையாளர்களையும் T.ராஜேந்தர் அவர்கள் சந்திக்கவுள்ளார். 

இதனிடையே உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் T.ராஜேந்தர் அவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, பூரண குணமடைந்து திரும்பி வருமாறும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் T.ராஜேந்தரை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட உலகநாயகன் கமலஹாசன்  "நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே!" என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ…


 

நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே!#TRajendar pic.twitter.com/TyTrNh4dhX

— Kamal Haasan (@ikamalhaasan) June 14, 2022