நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் எனிமி. அரிமா நம்பி இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படம், ஆயுதபூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையடுத்து நடிகர் விஷால் அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னதாக வெளியான வீரமே வாகை சூடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் ட்ரண்டாகும் நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.