தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனரான இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அக்னி சிறகுகள். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் அக்னிசிறகுகள் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சிவா தயாரித்துள்ளார்.

முன்னதாக இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக காக்கி, தமிழரசன், கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அதேபோல் அருண் விஜய்யின் நடிப்பில் பார்டர், பாக்சர்,சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளிவர உள்ளன.

இதனிடையே விஜய் ஆண்டனி & அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள அக்னிசிறகுகள் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. அக்னிச்சிறகுகள் படத்தில் அக்சராஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். K.A.பாட்சா ஒளிப்பதிவில் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அக்னிச்சிறகுகள் திரைப்படத்தின் டீசர் வருகிற மே 27-ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் சிறார்கள் திரைப்படத்தின் மீதான அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.