இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல்,பிகில் என்று படங்களை இயக்கினார் அட்லீ.

மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.இதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை இயக்கி வருகிறார் அட்லீ.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் பிகில் , பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் விஜய்.அதிலும் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக ஆனது.இந்த படத்தின் காட்சி ஒன்றை அமேசான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர்.

அத்துடன் இந்த ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து முழுநேர படம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ஒரு ட்வீட் செய்திருந்தனர்.அதற்கு பதிலளித்த அட்லீ செஞ்சுட்டா போச்சு என பிகில் பட வசனத்துடன் விரைவில் படம் நடைபெறும் என்ற நம்பிக்கையை தந்துள்ளார்.ஏற்கனவே விஜயை அடுத்து இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் அட்லீ பெயர் இடம்பெற்று வருகிறது அது ராயப்பனின் கதையாக இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.