பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி அடுத்து ஹீரோ மற்றும் இயக்குனர் ஆக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.நானும் ரௌடி தான் இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி நயன்தாராவுடன் இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் படம் கொரோனா காரணமாக நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் RJ பாலாஜி.மூக்குத்தி அம்மன் படத்தினை RJ பாலாஜி இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RJ பாலாஜி அடுத்து நடித்துள்ள வீட்ல விஷேஷம் படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.RJ பாலாஜி மற்றும் NJ சரவணன் இணைந்து இந்த படத்தினை இயக்கியுள்ளனர்.இந்த படம் பதாய் ஹோ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என தகவல்கள் கிடைத்துள்ளன.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சத்யராஜ்,ஊர்வசி,மறைந்த நடிகை KPAC லலிதா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் செம ரகளையான ட்ரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் கவனம் பெற்று வரும் இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்