அத்தை மீது ஆசைப்பட்ட மருமகனின் ஆண் உறுப்பை வெட்டி கொன்ற மாமன்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அத்தை!

அத்தை மீது ஆசைப்பட்ட மருமகனின் ஆண் உறுப்பை வெட்டி கொன்ற மாமன்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அத்தை! - Daily news

அத்தை மீது ஆசைப்பட்ட மருமகன் கள்ளக் காதலில் இருந்து வந்ததால், இதனைத் தெரிந்துகொண்ட மாமன், மருமகனின் ஆண் உறுப்பை வெட்டி கொன்ற நிலையில், இதனை கேள்விப்பட்ட அந்த அத்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படியான ஒரு கள்ளக் காதல் சம்பவம், கொலையிலும், தற்கொலையிலும் முடிந்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செருனா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட  பிகானேர் ஜிலே பகுதியில் உத்ரம் தாலுராம், தனது மனையினா கெளரா தேவி உடன் வசித்து வந்தார். 

இந்த தம்பதியின் மருமகனான உறவு முறையான குசால் மேக்வால், அத்தை கௌரா தேவி மீது சபலப்பட்டு உள்ளார்.

இதனால், குசால் மேக்வால், தனது அத்தை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அத்துடன், குசால் மேக்வால், தனது அத்தையுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

அப்போது, மருமகன் குசால் மேக்வாலின் மனதை புரிந்து கொண்ட அத்தை கெளரா தேவியும், குஷாலுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இதன் காரணமாக, இவர்களுக்கு இடையே கள்ளக் காதல் உறவு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, இவர்கள் இருவரும் தொடர்ந்து தனிமையில் சந்தித்துக்கொண்டு உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த உல்லாச இன்ப வாழ்க்கை, கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இருக்கிறது.

இப்படியாக இவர்களது கள்ளக் காதல் பல வருடங்களாக தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் கெளரா தேவியின் நடத்தையில், அவரது கணவனுக்கு சந்தேகம் வந்து உள்ளது. இதனால், அந்த கணவன் தனது மனைவிக்கு தெரியாமல் விசாரித்து கண்காணித்து வந்த நிலையில், தங்களது மருமகன் உடன் தனது மனைவிக்கு இருக்கும் கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாமன், இது குறித்து தனது மனைவியிடம் சண்டைப் போட்டிருக்கிறார். எனினும், இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அந்த பெண், தனது மருமகன் உடனான கள்ளக் காதலை தொடர்ந்து இருக்கிறார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை மிரட்டியும், பின்பு கெஞ்சியும் பார்த்திருக்கிறார். ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் கவலைப்படாத அந்த பெண், தனது கள்ளக் காதலை தொடர்ந்திருக்கிறார்.

இதன் காணரமாக, இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த கணவன், சற்று யோசித்துவிட்டு தனது மருமகனான குஷாலை தனது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அந்த தோட்டத்தில் வைத்தே அவரை அடித்து கொன்று, அவரது ஆண் உறுப்பை அறுத்திருக்கிறார்.

பின்னர், அவனது உடலை ஒரு ஒட்டகத்தின் மீது வைத்து கொண்டுச் சென்று அந்த கிராமத்திற்கு ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் வீசி விட்டு சென்றிருக்கிறார்.

இந்த கொலை சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த உடலை மீட்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், உயிரிழந்த குஷாலின் அந்தரங்க பகுதி வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், “குசால் மேக்வாலுக்கும், அத்தை கெளரா தேவிக்கும் இடையே இருந்த கள்ளக் காதல் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணமாக, கெளரா தேவியின் கணவன் தான், குசால் மேக்வாலை கொடூரமாக கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில், தனது கள்ளக் காதலன் குஷால், தனது கணவனால் கொலை செய்யப்பட்ட தகவலை கேள்விப்பட்ட அத்தை கெளரா தேவி, இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் ஓடிச் சென்று அந்த பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment