தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களா கொரோனா என்னும் கோரப் பிடியில் அனைவரும் சிக்கித் தவித்த நிலையில், பள்ளி செல்லும் மாணவர்களும் அப்படியே வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார்கள்.

இதன் காரணமாக, கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்போது வரை நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், தற்போது அந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

இப்படியான சூழலுக்கு முத்தியில் தான், “அந்த பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல், அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும்” என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் தொடங்கும் தேதி கூறப்படும் என்றும், பள்ளி கல்வித் துறை ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில் தான், சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சற்று முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் எந்த வகுப்புக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்கள் அனைவருக்கும் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” என்று, அறிவித்தார்.

அதே போல, “12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” என்றும், அமைச்சர் கூறினார்.

குறிப்பாக, “11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும்” என்றும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

முக்கியமாக, “இந்த அறிவிப்புடன் காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி பொதுத் தேர்வுக்கான அட்டவணை விவரங்கள்  என அனைத்துயும் இன்றே வெளியிடுப்படும்” என்று, ஏற்கனவே பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். 

அதன்படியே, குறிப்பிட்ட இந்த அறிவிப்புகளையும் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக வெளியிட்டார். 

அதன் படி, “2023 மார்ச் 13 ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.

அதன் தொடர்ச்சியாக 2023 மார்ச் 14 ஆம் தேதி, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும். 

அதன் பிறகு, 2023 ஏப்ரல் 3 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும்” அமைச்சர் அன்பில் மகேஷ் ஒவ்வொரு அறிவிப்புகளாக வெளியிட்டார்.

மிக முக்கியமாக, “வரும் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சனிக் கிழமையும் பள்ளிகள் விடுமுறை” என்றும்,  அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.