அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பமாக, “ஓரினச்சேர்க்கை தான் பள்ளி மாணவனை உயிர் பலி வாங்கியதா?” என்கிற கேள்வியும் எழுந்துள்ளது, அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், தனது பெற்றோரிடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், மாணவன் மணிகண்டன், அரியலூரில் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இப்படியான சூழலில் தான், அந்த மாணவன் தனது தாத்தா பாட்டியை பார்க்க பொற்பொதிந்த நல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம். 
எனினும், தற்போதைய சூழலில் 11 ஆம் வகுப்பு பொதுதேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அந்த மாணவன் தேர்வு எழுதிவிட்டு, தனது பாட்டி வீட்டிற்கு வந்து உள்ளார். 

அப்படியான நிலையில் தான், அன்றைய தினம் இரவு தனது பாட்டி வீட்டின் முன் பகுதியில் படுத்து மணிகண்டன் தூங்கி உள்ளார்.

அப்போது, அந்த நேரத்தில், அந்த மாணவனின் தலையில், மர்ம நபர்கள் யாரோ கல்லை போட்டு கொலை செய்து உள்ளனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், பள்ளி மாணவன் மணிகண்டன் தங்கி படித்த விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், 9 ஆம் வகுப்பு மாணவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததும், இதனைப் பார்த்த மணிகண்டன், அங்குள்ள விடுதி வார்டனிடம் புகார் கூறியதை அடுத்து, இந்தக் கொலை நடந்ததும்” தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்த 12 ஆம் வகுப்பு மாணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த மாணவனிடம் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.