ஆகச் சிறந்த இயக்குனராக இந்திய திரையுலகமே நிமிர்ந்து பார்க்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரதிராஜா அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவர்கள் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். முன்னதாக இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் நேற்று ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை சீராக இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகுந்த அக்கறையோடு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்” என தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவக்குழுவினர் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். "கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னமும் சிகிச்சையை தேவைப்படுவதால் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும்" தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இதோ…
 

பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம். - மருத்துவமனை அறிக்கை #Bharathiraja #MGM pic.twitter.com/7XUIh0zxhh

— Jaya Plus (@jayapluschannel) August 30, 2022