காரைக்குடியில் சிலம்பரசன் TR...வைரலாகும் பத்துதல படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் !
By Aravind Selvam | Galatta | August 30, 2022 21:33 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.
ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெறவுள்ளது.பெல்லாரியில் நடைபெற்று வந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பின் முதல் கட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Latest click of @SilambarasanTR_
— Search Around Web (@searcharoundweb) August 30, 2022
❤️ #VendhuThanindhathuKaadu #PathuThala #VendhuThanindhathuKaadu pic.twitter.com/Y8HMPeM2xd
🤘🏽 in Karaikudi with our AGR @SilambarasanTR_ anna @Gautham_Karthik brother & #Kingsly buddy
— TeeJay Arunasalam (@Iamteejaymelody) August 29, 2022
Fun times! #PathuThala pic.twitter.com/dFafyF4190