தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுசீந்திரன் தனது முதல் திரைப்படமாக இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் வெண்ணிலா கபடி குழு தான் முதல் படம்.

ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்ற வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய துணை நடிகர் வேடத்தில் அறிமுகமானவர் நடிகர் ஹரி வைரவன். தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் இணைந்து குள்ளநரி கூட்டம் திரைப்படத்திலும் நடித்த ஹரி வைரவன் மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு பார்ட் 2-விலும் நடித்திருந்தார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் தற்போது காலமானார். முன்னதாக சர்க்கரை நோய், உடல் எடை காரணமான உடல் உபாதைகள் இருதய பிரச்சனை மற்றும் சிறுநீரக கோளாறு என பல்வேறு நோய்களால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவனின் உடல்நிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த மோசம் அடைந்தது.

இந்நிலையில் இன்று டிசம்பர் 3ஆம் தேதி நள்ளிரவு 12:15 மணி அளவில் நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை மோசமாகி தனது உடல் தோற்றமே முழுவதும் மாறி போய் பரிதாப நிலையிலிருந்த நடிகர் ஹரி வைரவன் தற்போது உயிரள்ளது தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர்  ஹரி வைரவன் அவர்களின் குடும்பத்தினருக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர்
ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் காலமானார் !#GalattaNews 📢 #VennilaKabadiKuzhu #ActorHariVairavan #RIPHariVairavan pic.twitter.com/ebVTMDNqlg

— Galatta Media (@galattadotcom) December 3, 2022