கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய் அவர்கள் தனது மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 திரைப்படத்தில் இணைகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டிசம்பர் மாதத்தில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

தளபதி விஜயின் திரைப்படங்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு பாடல்களும் எப்போதும் விருந்தாக அமையும். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட்டான நிலையில், 2வது பாடலாக "தீ தளபதி" எனும் பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ...
 

#VarisuSecondSingle - #TheeThalapathy 🔥
THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal#30YearsOfVijayism pic.twitter.com/bpZIjNRLq4

— Sri Venkateswara Creations (@SVC_official) December 2, 2022