இறுதி கட்டத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... ரிலீஸ் குறித்த அதிரடியான முக்கிய அறிவிப்பு இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்,sivakarthikeyan in maaveeran telugu release rights bagged by asian cinemas | Galatta

இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிரடியான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிய போதும் அடுத்தடுத்து வரும் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK24 திரைப்படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்து சில தினங்களுக்கு முன்பு. SK21 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த, மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீசீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடலான சீனா சீனா பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 10 என்ற அறிவிப்பு வந்த பிறகு தேதி மாற்றப்பட்டது. எனவே வரும் ஜூலை 14ம் தேதி தமிழில் மாவீரன் தெலுங்கில் மஹாவீருடு என இரு மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

We are glad to be associated with @AsianCinemas_ in bringing you @Siva_Kartikeyan’s #Mahaveerudu in theatres across Andha Pradesh & Telangana on 14th July!💪🏼😇@AsianSuniel @madonneashwin @iamarunviswa @AditiShankarofl @suneeltollywood @DirectorMysskin @iYogiBabu @vidhu_ayyannapic.twitter.com/kmAO1f9n3t

— Shanthi Talkies (@ShanthiTalkies) May 19, 2023

வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!
சினிமா

வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு... அருள்நிதியின் மிரட்டலான அவதாரத்தில் கழுவேத்தி மூர்க்கன்! அதிரடி ட்ரெய்லர் இதோ
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு... அருள்நிதியின் மிரட்டலான அவதாரத்தில் கழுவேத்தி மூர்க்கன்! அதிரடி ட்ரெய்லர் இதோ

சினிமா

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கபில் தேவ்!"- அடுத்த கட்டத்திற்கு நகரும் லால் சலாம்… ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!