தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆரி அர்ஜுனன், மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தொடர்ந்து தமிழ் திரையுலகில் நடித்து வரும் ஆரி அர்ஜுனன், இயக்குனர் ராஜேந்திரன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள அலேக்கா மற்றும் இயக்குனர்களின் இயக்கத்தில் பகவான் ஆகிய திரைப்படங்களில்  நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரி.

இதனையடுத்து SAS புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் யோகராஜ் தயாரிக்கும் முதல் படத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் அஸ்வின்.B இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் படமான இந்த புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆரி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒளிப்பதிவாளர் KG.நதீஷ் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் ஸ்ரீ சாய் தேவ் இசை அமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 16) பூஜையுடன் தொடங்கியது. எனவே விரைவில் இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.