தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். முன்னதாக இந்த ஆண்டில் (2022) இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல், பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை மற்றும் வைபவின் காட்டேரி உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய வேடங்களில் வரலக்ஷ்மி நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் வரலக்ஷ்மி நடித்துள்ள பாம்பன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக கலர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கில் ஹனுமன், வீர சிம்ம ரெட்டி மற்றும் சபரி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி கன்னடத்தில் லகாம் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

முன்னதாக நடிகை சமந்தா நடிப்பில் PAN INDIA திரைப்படமாக தயாராகி இருக்கும் யசோதா திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் கொன்றால் பாவம்.

சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கொன்றால் பாவம் திரைப்படத்தை EINFACH STUDIOS மற்றும் D PICTURES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று அக்டோபர் 28ஆம் தேதி முதல் கொன்றால் பாவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர் கொன்றால் பாவம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Here we go! Stepping into our new venture with all your support, love and blessings✨

Presenting you the first look of #KondraalPaavam

Shoot begins today!

Starring @Actorsanthosh @varusarath5
Directed by @dayalpadmanaban
Produced by @EinfachStudios
Association with #DPictures pic.twitter.com/B6iFwN23iJ

— Einfach Studios (@EinfachStudios) October 28, 2022