தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அடுத்தடுத்து வரலட்சுமியின் நடிப்பில் காட்டேரி & பாம்பன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன

மேலும்  தெலுங்கு சூப்பர்ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் NBK107 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. கிருத்திகா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர் பாலு எழுதி இயக்கும் கன்னித்தீவு திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா ஆஷ்னா ஜாவேரி மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்னித்தீவு படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்ய ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியானது. வரலட்சுமி சரத்குமார் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா என நான்கு கதாநாயகிகள் அதிரடியில் கலக்கும் கன்னித்தீவு படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலக்கலான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.