வெற்றிகள் எவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. Jungkook என்ற Jk வும், பல தடைகளைத் தாண்டியே இசைப் பயணத்தில், உலகையே கட்டியாளும் இந்த தனிப்பெரும் சாம்ராஜ்யமாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

Busan -இல் பிறந்த இவருக்கு, badminton player ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால், big bang G-dragon னை கண்டு மாறிப்போனது Jungkook மனம்.

ஒரு இசைப் போட்டியின் ஆடிஷனில் தோற்ற போதும், அவர் குரல் பல kpop கம்பெனிகளை கவர்ந்து இழுத்தது. அதில், bighit யை தேர்ந்தெடுத்த Jk, trainee ஆக தனது இசை பயணத்தை 2011 ல் தொடங்கினார். சில மேடைகளில் பின் ஆட்டக்கார குழுக்களில் ஆடியும் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொண்டார் Jungkook.

வெறும் பதிமூன்றே வயதான kookie, மிக கடுமையான உழைப்பிற்குப் பின் கடந்த 2013 ல், BTS குழுவில் முதன்மை பாடகராக அறிமுகமானார். 15 வயது Jungkook, அக்குழுவின் கடைக்குட்டி சிங்கமானார். அதனாலேயே, தனது சகோதரர்களைப் போல் தான், சக members யையும் நினைத்துக்கொண்டார்.

ஆரம்பக் காலங்களில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட Jungkook Jk, எல்லாம் எனதே என்றிருப்பது, எளிதில் எதையும் வெளிப்படுத்தத் தயங்குவது, தனக்கே ஒரு முகமூடி போட்டுக் கொள்வது என பல மன போராட்டங்களில் சிக்கி இருக்க, பின் BTS சகோதரர்களின் அறிவுரைகளால் தன்னையே ஒரு புதிய இளைஞனாகச் செதுக்கிக் கொண்டார்.

“தன்னிடம் BTS சகோதரர்கள் 6 பேரின் சாயலையும் காணலாம்” என அவரே ஒரு முறை கூறியிருக்கிறார். “Jk யை வளர்த்தது நாங்களே” என்று, BTS சகோதரர்கள் 6  பேரும் பெருமிதம் கொள்வதும் உண்டு.

ஒரு முறை குழுவில் உள்ள மூத்த சகோதரர்கள் தங்கள் மன கவலைகளைக் கூறுகையில், Jk வும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகவே பேசவும் செய்தார். அதைக் கேட்ட BTS members அப்படியே திகைத்துப் போனார்கள். “பல இன்னல்களை அனுபவித்து, குழுவின் முன்னேற்றத்திற்கு இரவு பகல் பாராமல் BTS சகோதரர்கள் உழைக்கையில், என்னால் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய முடியாதோ?” என்றெண்ணியே வருத்தம் கொள்வாராம் Jk. இது, Jk வின் மறு பக்கம் என்றே சொல்லலாம்.

J-hope குழுவில் இருந்து விலகும் தருவாயில் இருந்த போது, Jk கட்டி அழுது அவரை அரவணைத்து, “நீங்கள் குழுவில் இருக்க வேண்டும்” என்று கூறியது, J-hope மனமாற்றத்திற்கு ஒரு வகையில் காரணமாக இருந்தது. குழுவின் ஒற்றுமைக்கும் அவரது பங்கு மிகவும் அளப்பரியாதது.
 
ஆங்கில மொழியில் சற்றே பின்தங்கியிருந்த Jk, தனக்காக மட்டும் இன்றி தன் சர்வதேச ரசிகர்களுக்காகவும் ஆங்கிலம் கற்று கொள்கிறார். குழுவின் leader ஆன RM ன் பாரத்தை பகிர்ந்து கொள்ளவும் தான் விரைந்து ஆங்கிலம் கற்றுகொள்ளவதாக Jk கூறுகிறார்.

Jungkook இது வரை பல ஆங்கில பாடல்களுக்கு (cover songs) பாடியிருக்கிறார்.

Jk வெறும் வார்த்தைக்காக “தன் ரசிகர்களை நேசிப்பதாக” சொல்வதில்லை. அதற்கு அவர் tattoo வே சாட்சி.

ஒவ்வொரு முறையும் ARMY யை பற்றி கடிதங்கள் வாசிக்கையில், அவரது கண்ணீரே அன்பின் ஆழத்தை அளந்து பேசும். குறிப்பாக, concert களில் கண்கலங்கும் Jk ரசிகர்களையும் கலங்கடித்து விடுவார்.

“Jungkook -ன் அற்புதமான படைப்பாக Magic shop பாடலை” தான், பலரும் முன்மொழிகிறார்கள். “அதில், இருக்கும் ஒவ்வொரு வரியும் ரசிகர்களின் இதயத்தில் நேரடியாக ஊடுருவி, சோர்ந்து போன செல்களை தட்டி எழுப்பி புது இரத்தம் பாய்ச்சவே செய்கிறது” என்ற சொல்லாடலும் உண்டு.

Jungkook -ன் G.C.F காணொளி தொகுப்பில் அவரின் கலை கண்ணை, நம் கண்களால் காணச் செய்து Visual விருந்து கொடுத்திருப்பார். இதில் இயக்குனராய், படத்தொகுப்பாளராய், நடிகராய், புகைப்பட இயக்குனராய், அவர் தொட்டதெல்லாம் பொன்னாய் மின்னி ஜொலித்தது.

Jk வின் நடனத்திற்கு, உலகமெங்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

BTS குழுவில் மையமே அவர் தானே! Airplane pt 2 தொடக்க நடை, Fake love era Jk, 2019 (190811) Lotte family concert என அசைக்க முடியா JK வின் அசத்தலான மேடைகளை அடுக்கிக்கொண்டே காலம் முழுக்க நடை போடலாம்.

Muscle bunny, Justin seagull, Jeon cena மற்றும் பல பெயர்களால் ரசிகர்கள் கொண்டாடும் Jeon jungkook, BTS குழுவின் ஆகச்சிறந்த பொக்கிஷம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!!

Happy Birthday Jeon Jungkook!