இசையால் கவரப்பட்ட பாரத தேசத்துத் தமிழ் பெண் ரசிகைகளின் வாழ்த்து சாரல்கள்.. சரளங்களாய்..!

“இது வரை  நேரில் கூட பார்த்திராத ஒருவர் மீது, எப்படி இவ்வளவு அன்பை அள்ளி கொடுக்க முடிகிறது?!” என்றே, K pop பாடகர் Jk ரசிகைகளைக் கண்டு கேட்கத் தோன்றுகிறது. ஆனால், அவர்களோ “Jk வும் எங்களைப் பார்த்ததில்லை, ஆனால் அன்பை வாரி இரைகிறாரே” என வாயடைக்கச் செய்கின்றனர். இதோ, உலகெங்கும் உள்ள Jk வின் தீவிர ARMY பட்டாளத்திலிருக்கும் பாரத தேசத்துத் தமிழ் ரசிகைகள் தரும் ஒரு துளி அன்பு.. இங்கே வாழ்த்துக்களாய்..!

ஜோஸ்லின்

“செல்ல பேரு முயலு, ஸ்டேஜ்ல ஏரிட்டா புயலு!” என்று, செல்லமாய் சொல்லிக்கொண்டே சிரிக்கிறார்.

“JK ஸ்மையில் அவ்வளவு க்யூட்டா இருக்கும். பெரும்பாலும் அவர் தூங்கிட்டே தான் இருப்பாரு. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனா, நானும் அப்படிதான்” என்று, மீண்டும் சிரிக்கிறார்.

“JK கேரட் சாப்பிடும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். JK வின் வெகுலி தனம், டிரஸ், ஹேர் ஸ்டைல், அவருடைய நட்பு, பிகேவியர்ஸ் இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். JK விடம் எதாவது ஒன்று புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கு. இந்த ஆர்வம் தான் எனக்கு எப்போதுமே பிடிச்ச விசயம். ஜங் கூக், எல்லோரிடமும் மிகவும் பணிவா, அதே சமயம் ரொம்ப பண்பா நடந்துகொள்வது எல்லாம் சான்சே இல்லை.

ஜியோன் ஜங் கூக் பாடினால், அது எந்த சாங்காக இருந்தாலும், அது அவருக்கு சூட்டானாலும், ஆகாமல் போனாலும்; அந்த வரிகளை நான் சம்பந்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை அல்லது உணர முடியவில்லை என்றாலும், அவனுடைய குரலில் நான் அப்படியே கரைந்தே.. விடுவேன். ஜியோன் ஜங் கூக்வால் செய்ய முடியாதது என்பது எதுமே இல்லை. அவனால், எல்லாம் செய்ய முடியும்.

ஜங் கூக் பாட்டு ரொம்ப மெலோடியா இருக்கும். அதே சமயம் ரொம்பவே ஹாட்டா ஃபர்பாம் பண்ணுவான். ரொம்ப இன்டெப்தா, மேக்னடிக்கா இருக்கும். அப்படி ஒரு வாய்ஸ். ஆனால், மனுசன் எதுக்குமே அலட்டிக்க மாட்டான். கூடவே குழந்தைத் தனம் வேற. இப்பிடியெல்லாம் இருந்தால், யாருக்குத் தாங்க ஜங் கூக்க பிடிக்காது?”

“ரகசியமா ஒன்னு சொல்லட்டா..?, ஜங் கூக் எந்த பொண்ணுங்ககிட்டேயும் வழியமாட்டான், போதுமா?” என்று, நம்மிடமே வெட்கம் தெறிக்க.. மணக்கப் பேசுகிறார்.

“ஆனா, ஒரு முக்கியமான விசயம், ஜியோன் ஜங் கூக்கிட்ட இருந்து அவன் பயன்படுத்திய Hoottis எனக்கு வேண்டும். மற்றபடி, அவனை நான் தொட்டுப் பார்க்க வேண்டாம், அவனும் என்னைத் தொட்டுப்பார்க்க வேண்டாம். ஹக் பண்ண வேண்டாம்” என்று, வெட்கப்பட்டுக்கொண்டே சிரிப்பை சிதறவிடுகிறார்.

ஜீவிகா

“நட்சித்திரங்களை விட அழகாய் ஏதோ ஒன்று நெடுந் தூரத்தில்..
அந்த கண்ணடிக்கும் வெண்ணிலவின் சிரிப்பின் ஈர்ப்பு விசை
என்னைத் தாக்கி வீழ்த்த,

வீழ்ந்த என் காயங்கள் அனைத்தும் காணாமல் போனது..
சற்றே அவன் ஆழமான மெல்லிசையில்!”
என்று, கவிதையே வாசிக்கிறார்.

மு. சங்கீதா

Anneyong Oppa!

“ஆரம்ப காலங்களில் Oppa என்றழைப்பது உனக்குப் பிடிக்காது. அது தெரிந்தே அழைப்பது தான் எனக்குப் பிடித்தது. இப்போது Oppa என்று அழைத்தால், உனக்குப் பிடிக்கும் தானே? ஏன் எனில் நம் உறவின் ஆழம் நீ அறிந்தது. கோல்டன் மாக்னெ (Golden maknae) என்ற செல்ல பெயர் உனக்கு மிகவும் பொருத்தமானது. நீ வெறும் பாடகன் அல்ல, பன்முகத்திறனாளன்!

ஜியோன் ஜங் கூக் எல்லா பீல்டுலயும் சூப்பரா பண்ணுவாறு. ஆனால், 'எல்லா துறையிலும் நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று சொல்வார். ஆனால், அப்படி அவர் புது புது விசயங்களை அவர் முயற்சி செய்வது எனக்கு இன்னும் மோட்டிவேட்டா இருக்கும்.

Jk

JK வின் டான்ஸ் எல்லாம் நிரம்பி வழியிர அளவுக்கு ரொம்ப பிடிக்கும். மற்ற மெம்பர்ஸ் மேல அவர் வைத்திருக்கும் மரியாதை எல்லாம் மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு விசயம். ஜங் கூக், ஒரு உண்மையான உழைப்பாளி. இந்த உலகம் பாராட்டும் இந்த பாராட்டுக்களுக்கெல்லாம் அவர் மிகவும் தகுதியானவர். இந்தியாவில், இன்னும் அவரைப் பற்றிய தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது எனக்கு வருத்தம் தான். அவரைப் பற்றிப் பேச சொன்னால், சத்தியமா ஒரு நாள் போதாதுங்க, என் வாழ்நாளில் ஒரு முறையாவது ஜியோன் ஜங் கூக்கை  பார்த்துவிட ஆசை!” என்று, மெய்சிலிர்க்கப் பேசுகிறார்.

தி.சுதந்திரா

“அனைத்திலும் சிறந்தவன் Jeon Jungkook. அவன் குரலால், நடனத்தால் என்னை மிகவும் கவர்ந்தவன்.

அவன் Bunny ஸ்மைலில் விழுந்தேன் அன்று!
நான் எழவே இல்லை இன்றும்!

அவனின் படைப்பில் ஒன்றான “magic shop” பாடல், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவனுடைய ரசிகன் நான் என்பதில், என்றும் பெருமிதம் அடைகிறேன். அவனே என் வாழ்வின் உத்வேகம்” என்று, பூஸ்டப் ஆகிறார்.

எம்.சுப்ரியா

“Bunny ஸ்மைலிங் Kooki -யை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் BTS members உடன் விளையாடும் குறும்புத் தனம், பாடல்கள் பாடும் போது அவரது ஸ்பெஷலான Swag Look, Run BTS சேட்டைகள் என அவருடைய தனித் தன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். Finally He is My Cutie Charm and His Love For Army is Unbeatable!" என்று, அவரது கோல்டன் வரிகளையே மேற்கொள் காட்டுகிறார்.

ஜீனா ஷெர்லி

“Jk வெறும் வார்த்தைக்காக “தன் ரசிகர்களை நேசிப்பதாக” சொல்வதில்லை. அதற்கு அவர் tattoo வே பெரும் சாட்சி. Jk வின் நடனத்திற்கு, உலகமெங்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதில், ஒரு துளி நான். பெருவெள்ளமே அவரது ARMY தான்!” என்று, அன்பு மனம் வீசுகிறார். 

பிரவேகா

“Jeon Jungkook வயதில் மட்டுமல்ல, குணத்திலும் குழந்தையே! இவ்வளவு சிறு வயதில் ஒருவன் இத்தகைய இணையற்ற ரசிகர்கள் கூட்டத்தை தன் வசப்படுத்தியது எப்படி என்பது ஆச்சரியம் தானே!? ஆனால், இவை அனைத்தும் தானாக வந்தவை அல்ல. அவரின் முழு மூச்சில் செயல்படும் ஆற்றல் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. Jeon Jungkook ரசிகையாகவே வாழ்வேன்! Jeon Jungkook ரசிகையாகவே மாய்வேன்!” என்று, வாழ்வின் எல்லைக்கோட்டிற்கே செல்கிறார்.