உலக அளவில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியும் வருகிறார் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை சன்னி லியோன் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாக புதிய ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன்னி லியோனுடன் இணைந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் சதீஷ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்குகிறார்.

VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியானது . OMG (ஓ மை கோஸ்ட்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியானது. இந்த டைட்டில் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.