இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிசாசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாவது பாகமாக தற்போது தயாராகியுள்ளது பிசாசு 2 திரைப்படம்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகைகள் பூர்ணா & நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப் & வெற்றி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் டி.முருகானந்தம் அவர்களின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகியுள்ள பிசாசு 2 படத்திற்காக முதல்முறை இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றுகிறார் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. சிவா சாந்தக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வந்த பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. முன்னதாக பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நிலையில் தொடர்ந்து படத்தின் டீசர் & டிரைலர் மற்றும் ரிலீஸ் குற்த்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.