இதயத் திருடன் ஜியோன் ஜங் கூக்!

இயற்றிய இசை, எழுதிய பாடல்கள், rap பாடும் தொனி, காந்த குரல், குழந்தை மனம், வெள்ளை உள்ளம், கண் கவர் நடனம் என்று, நீ இந்த உலகையே ஈர்க்க  வைத்திருக்கும் அஸ்திரங்கள் யாவும் அவ்வளவு சுலபமல்ல. உன்னையே இழக்கும் அளவுக்கும் உழைக்கும் நீ, அத்தனை வெற்றிகளைப் பெற்றும் தலைக்கனம் அற்றவனாய் வீற்றிருக்கிறாய். அதனால் தான், பாடும் போது கூட உன்னால் எளிதில் பறக்க முடிகிறதோ!?

Euphoria பாடலின் போது வானத்தில் பறக்கையில் 'நீ பிடிக்கும் கயிறாக நான் இருக்கக் கூடாதா' என்றெண்ணிய பெண் ரசிகைகள் கூட்டம், இந்த உலகம் விரிந்து பறந்த அளவுக்கு உள்ளது.

நேரலையில் தரையில் ஆடி பாடுவதே கடினம் என்றிருக்கும் போது, நீயோ பறந்துகொண்டே ஒட்டுமொத்த இளம் பெண்களின் மனங்களையெல்லாம் பறித்துச் சென்றாய். பறந்தது.. பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், பின் அந்த அனுபவத்தை நீ விவரிக்கையில் “எவ்வளவு துணிச்சலாக நீ இதைச் செய்தாய்” என எங்கள் எல்லோருக்கும் புரிந்தது.

இப்படி ஒரு புறம் இருக்க, “Bon voyage - ன் போது, தலை கீழாகத்தான் குதிப்பேன்” என, அனைவரையும் அசரடித்தாய். பதறிப்போனது எங்கள் மனது.
 
ஏனோ தெரியவில்லை நீ எழுதிய "Still with you " - பாடல் வரிகள், என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த இசை சாம்ராஜ்யத்தையும் உன் வசம் நெருக்கமாக்கியது. அதில் நீ கொட்டிய உணர்வுகள், சிந்திய வியர்வைகள் “உன் மனதில் இருப்பது யாரென?” கேட்கத் தோன்றினாலும், “அது, நானாகத் தான் இருப்பேன்” என, உலகின்  ஒவ்வொரு பெண் ரசிகைகளும், தன்னைத் தானே நினைத்துக்கொண்டதில் தவறில்லையே.

“Earphones வழியே உன் குரலோடு, நீயும் எத்தனையோ இளம் பெண்களின் ஆழ் மனதில் ஆளச் சென்றதையும், எந்த இளம் பெண்ணும் உன்னைத் தடுக்காமல், தன்னை ஆள அனுமதித்ததையும்” கண் கொட்டாமல் பார்த்து ரசித்த இமைக்கா நொடிகள் எனது!

“Baby Jungkook - ஐ நான் வெகுவாக ரசித்திருக்கிறேன். Run bts -இல் நீ செய்யும் சிறு சிறு சேட்டைகள், விளையாட்டையே வீரியமாக ஆடும் யுத்தி என அந்த நிகழ்ச்சி முழுக்க உன் bunny புன்னகையால் நிறைத்து விடுவாய்” என்ற, தமிழ் ரசிகைகளின் மனங்களை நான் வரிகள் விடாமல் படித்திருக்கிறேன்.

அப்பாவியாய் விரித்துப் பார்க்கும் கண்கள் (doe eyes) தோள் பட்டை தூக்கி மூக்கை சுருக்கி முயல் பல் காட்டும் சிரிப்பு, (nose scrunch smile) உதட்டைப் பிதுக்கிப் பேசும் மழலை மொழி (pout) சமயங்களில் கங்காரு போல் தோரணை, கூச்சம் அல்லது குதூகலம் ஆனால், காதை மூடிக்கொள்வது என இப்படி உன் சிறு சிறு அசைவும் ஒட்டுமொத்த உலக பெண்களையே ரசிக்க வைக்கிறது.

ஆனாலும், “குழம்பி நிற்கும் kookie யே எனது favourite” என்று, பெரும்பாலான இளம் கன்னிகளை எப்படியோ மயக்கி சொல்ல வைத்துவிடுகிறாய்.  

சொல்லப்போனால், நொடிகளில் மாறும் உன் முக பாவங்கள், நையாண்டி, எல்லாமே நீ ஒரு நடமாடும் meme என்று தான் எல்லோரையும் சொல்ல வைக்கிறது.
 
“ஒவ்வொரு இடத்திலும் தனித்துத் தெரியப்படும் நீ ஒரு தனிமை விரும்பி” என்பது, உன்னையே நேசிக்கும் உன் ரசிகைகளுக்குத் தெரியும். “வெளியில் சென்று சுற்றித்திரிந்து கொண்டாடுவதைக் காட்டிலும், வீட்டில் இருந்து மகிழ்வதே உன் விருப்பம். BTS குழுவின் chat களில் கூட ஆர்வம் காட்டாத நீ, அவ்வப்போது Vlive, weverse பக்கம் வந்து நீ அருள் தருவதையே, உலகு எங்குமுள்ள பெண் ரசிகைகள் வரமாகப் பார்க்கிறார்கள்.

“Vlive-இல் ஒரு முறை, நீ தினம் குடிக்கும் பானத்தைப் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டு, பின் சில நாட்கள் கழித்துப் புலம்பினாயே!? அது out of stock என்றும், அந்த பானம் உனக்கே கிடைக்கவில்லை” என்றும், செல்லமாய் கோபித்துக்கொண்டாய். அதற்கு, உன் பெண் ரசிகர் கூட்டமே சிணுங்கிக்கொண்டது.

சமீபத்தில் நீ வந்த Vlive -ஐ யாராலும் அவ்வளவு எளிதில் மறக்கவே முடியாது. “குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுடன் ஒரு online சந்திப்பை நீ சார்ந்த நிறுவனம் ஏற்பாடு செய்ய, ஆனால் நீயோ அதற்கு சில நாட்கள் முன்பாகவே Vlive -இல் வந்து, ஒரு mini concert யே நடத்தி அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி அளித்தாய். பெண் ரசிகர்கள் எல்லாம் திக்குமுக்காடிப் போனார்கள். உன்னோடு அந்த online சந்திப்பில் இணைய முடியாத பல million ரசிகர்கள் ஏங்கித் தவித்த வேளையில், அன்றைய இரவே நீ பாடிய பாடல்.., அது ஒரு கனவின் ராகம். online சந்திப்பில், உன்னோடு இணையத் துடித்து முடியாமல் ஏங்கிக் கிடந்த பெண் ரசிகர்கள் கூட்டத்தில், சிலர் அழுதும் தொலைத்தார்கள். ஆனால், இப்படிப் பரிதவித்துப் போன million கணக்கான ரசிகைகளின் அன்றைய இரவை, நீயே வேட்டையாடி விளையாடிச் சென்றாய். தன் காதலர்களை மறந்து, உனது பாடலில் மெய் சிலிர்த்துப் போனது இந்த இளம் பெண்களின் கூட்டம்.

அதற்கும் மேல், அன்று நீ அணிந்திருந்த ஆடை அன்றே விற்றுத் தீர்ந்தது. இதில் என்ன விசேஷமென்றால், அந்த ஆடை ஒரு சிறிய நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றாலும், அந்த நிறுவனத்திற்கு நீ மறக்க முடியாது திருப்புமுனையை அமைத்துத் தந்தாய். இப்படி, எல்லாம் செய்து விட்டு எதுவும் தெரியாத பச்சிளம் பிள்ளை போல், எப்படிதான் உன்னால் முகம் வைக்க முடிகிறதோ?! அந்த முகம் பார்த்துத் தான் வெட்கப்படவே, எங்கள் நாட்டு இளம் பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள் போலும்!?

“உன்னைச் செல்லப் பிள்ளை, சிறு குழந்தை, bunny என்று கொஞ்சினால், 'என் மறுமுகத்தை மேடையில் பார்' என்று, கொஞ்சும் பெண்களின் கன்னத்தில் அறையும் உன் duality... அப்பப்பா!

மேடையில் உன் முழு மூச்சையும் கொடுத்துவிட்டு.. பின், நிற்கக் கூட தெம்பில்லாமல் நீ தடுமாறிய பல தருணங்களை உன்னை முட்டுக்கொடுத்துத் தாங்கிப் பிடிக்க நினைத்து ஆவேசப்பட்ட இந்த பெண் ரசிகர் கூட்டம் பல முறை கலங்கியுமிருக்கின்றன.

“உன்னையே நீ கொடுத்து உழைக்கும் அந்த பண்பு” உன்னை, ஒவ்வொரு பெண்ணின் மனதில் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஒரு நாள் உன்னை, “International play boy” என்று, நீயே சொல்லிவிட்டு, பெண்களைக் கண்டால் பத்தடி பதுங்கிக் கொள்வதெல்லாம் உன் இயல்பு. இன்றோ, “Jeon jungkook தான் World's sexiest man! Jk வின் காதலி யார்?” என கண்டுபிடிக்க, உன்னை நிழல் போல் துரத்திய மீடியாவை, உலகமே உற்று நோக்கிய போது, நீ கொடுத்த banana milk, செம மாஸ். சரியான டோஸ்!

“ஓவியர் kookie - உன்னை எப்படி மறப்பேன்??” நீ தீட்டிய அனைத்து ஓவியங்களும் அருங்காட்சியகளில் அலங்கரிக்கப்பட வேண்டியவை. BTS in the soop ஓவியங்கள்! உன் BT21 kookie கதாபாத்திர வடிவமைப்பு எவ்விதத்திலும் சளைத்ததல்ல. உன் கற்பனைத் திறன் கண்டு வியக்காதவர் இவ்வுலகிலும் உண்டோ!?

மொத்தத்தில் உன் fanchant-யே எங்கள் பாராத தேசத்துப் பெண்களுக்குச் சுப்ரபாதம்! அதைப் பாடிக்கொண்டு, உன் இசையோடு காற்றில் கலந்து, தன்னை தாங்களே மோட்டிவேட் செய்துகொள்கிறார்கள் எம் தமிழ்த் தேசத்துப் பெண்கள். ஆனால், ஒரு நாள் நிச்சயம் உன்னை நேரில் கண்டு, கட்டியணைத்து நன்றி சொல்ல வேண்டும் என்றும், உலக பெண் ரசிகர்கள் கூட்டமே காத்துக்கிடக்கிறது, ஓர் அற்புதமான புது உலகை நீ அறிமுகம் செய்தமைக்கு! உன் இசையடியில் நன்றிக்கடன் பட்டுக்கிடக்கிறார்கள் இந்த உலகத்துத் தேவதைகள்!

Happy Birthday Jeon Jungkook!