“நான் பஸ்ல போயிருக்கேன்.. கஷ்டப்பட்டிருக்கேன்.” தனது ஆரம்பகால பயணம் குறித்து மனம் திறந்த நடிகை வாணி போஜன் – முழு வீடியோ உள்ளே..

ஆரம்பகால வாழ்க்கை குறித்து வாணி போஜன் பகிர்ந்த தகவல் -  Vani Bhojan about her serial career | Galatta

சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகமாகி பின் சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அதன்படி தொலைக்காட்சி தொடர்களான ஆஹா, மாயா, தெய்வமகள், லக்ஷ்மி வந்தாச்சு போன்ற தொடர்கள் மூலம் பரிச்சையமானார். இதில்  சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தெய்வ மகள் நெடுந்தொடரில் வாணி போஜன் நடித்த ‘சத்யா’ கதாபாத்திரம் மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. பின் தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் கடந்த 2020 ல் வெளியாகி மெகா ஹிட் அடித்த’ஒ மை கடவுளே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். பின்னர் தொடர்ந்து பல முக்கிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார் வாணி போஜன். அதன்படி மலேசியா டூ அம்னீசியா, லாக் அப், ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான், மிரல் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார் அதே நேரத்தில் டிரிப்பிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ் ஆகிய இணைய தொடர்களிலும் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார் மேலும் தற்போது அவர் நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியிருக்கும் ‘செங்களம்’ தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா ஏற்பாடு செய்திருந்தா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், "எனக்காக உயிர கூட கொடுப்பாங்க.. அந்தளவு அவளுக்கு என்ன பிடிக்கும். தெய்வ மகள் நாளிலிருந்து இதுவரைக்கும் நான் எந்த படப்பிடிப்பு போனாலும் எனக்காக வந்துடுவா...  அவ கைல என்னுடைய ஆட்டோகிராப் போட்டுருக்கா..  நான் நிறைய திட்டிருக்கேன்." என்றார் மேலும் அதனை தொடர்ந்து தனது ஆரம்ப கால திரைப் பயணம் குறித்து நடிகை வாணி போஜன், "என் கூட இருந்தவங்கலாம் இவ என்ன சாதிக்க போறேன்னு நினைச்சாங்க.. நான் அதையெல்லாம் அவமானங்களா பார்க்கவில்லை. நான் ஆட்டோ ல போயிருக்கேன், பஸ்ல போயிருக்கேன். கஷ்டப்பட்டிருக்கேன். அதெல்லாம் அவமானம் இல்லை. ஆனா இறுதியாக நான் சாதிச்சிருக்கேன். என்ன பார்க்குறவங்களாம் இந்த நிலையில் பார்க்குறாங்கல அதான் இங்கு சிறப்பு." என்றார்.

பின் தேவமகள் சீரியல் நடித்தது குறித்து அவர், "சத்யா அக்கா கூப்பிட்டா எனக்கு பெருமையா எடுத்துப்பேன். ஏனென்றால் அந்த பெயர் வாழ்க்கை முழுதும் இருக்க போகுது..  நான் சீரியல் ஏன் பண்ணேன் னு  வருத்தப்பட்டதில்லை.. எனக்கு  சீரியல் பண்ண பிறகுதான் எல்லா புகழும் கிடைச்சது... பணமும் அதுலதான் சம்பாதிச்சேன்." என்றார். மேலும் “ஓ மை கடவுளே படபடிப்பில் யாரும் என்னை சீரியலிருந்து வந்தவள் என்று நினைத்து பழகவில்லை. பொதுவாகவே இரண்டு ஹீரோயின் படத்துல இருந்தா இந்த முக்கியத்துவம் பிரச்சனை இருக்கும்.  நான் சீரியலில் இருந்து வந்தது வேற..ஆனா ரித்திகா அப்படி நினைத்ததில்லை. அவளுக்கு நான் அக்கா மாதிரி இருந்தேன்.. "  என்றார்.

மேலும் நடிகை வானி போஜன் அவர்கள் தனது திரைப்பயணம் குறித்து பகிரிந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோ இதோ..

மீண்டும் திரையில்  விஜய், சமந்தா.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு..
சினிமா

மீண்டும் திரையில் விஜய், சமந்தா.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு..

பக்கா மாஸாக இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி விஜய்க்கு முன்னணி நட்சத்திரங்கள் வரவேற்ப்பு... அசத்தலான பட்டியல் இதோ!
சினிமா

பக்கா மாஸாக இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி விஜய்க்கு முன்னணி நட்சத்திரங்கள் வரவேற்ப்பு... அசத்தலான பட்டியல் இதோ!

Social Media வில் தளபதி விஜய் செய்த 5 தரமான சம்பவங்கள்.. – அட்டகாசமான பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

Social Media வில் தளபதி விஜய் செய்த 5 தரமான சம்பவங்கள்.. – அட்டகாசமான பட்டியல் இதோ..