பள்ளியில் என்னென்ன சேட்டைகளுக்கு அடி வாங்கினார்?- சூரியின் கலாட்டாவான நினைவுகளை பகிர்ந்து கொண்ட வாத்தியார்! ட்ரெண்டிங் வீடியோ

சூரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வாத்தியாரின் கலகலப்பான வீடியோ,Soori school master reveals the reasons to get beaten | Galatta

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை பாகம் 1 திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை வெறும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் சூரி இதற்கு மேல் தேர்ந்த நடிகர் என புது அவதாரம் எடுத்துள்ளார். இனி எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்துவார் என சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சூரி ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி ரசிகர்களோடு கலந்துரையாடினார். அப்போது நடிகர் சூரிக்கு திடீரென சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது நிஜ பள்ளிக்கூட வாத்தியார் திரு.தமிழரசன் ஐயா அவர்கள் மேடைக்கு வர கொண்டாட்டம் கலை கட்டியது. 

அந்த வகையில், திரு.தமிழரசன் ஐயா அவர்கள் பள்ளிப் பருவத்தில் நடிகர் சூரியின் சேட்டைகள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “திடீரென ஒரு இரண்டு நாட்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை, என்ன என்று அவர்களது வீட்டில் கேட்டேன், நீங்கள் செய்த அநியாயம் அவன் ஓடிப் போய் விட்டான் என்றார்கள். பிறகு ஒரு இரண்டு நாட்கள் கழித்து TC வாங்குவதற்காக வந்தார்கள். அவன் பள்ளிக்கூடத்திற்கே வர மாட்டேன் என்கிறான் TC கொடுங்கள் என கேட்டார்கள். பிறகு TC கொடுத்துவிட்ட பிறகு முதலில் ஒரு பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார்கள் அங்கும் படிக்கவில்லை.. பிறகு அங்கிருந்து கொண்டு போய் மதுரையில் உள்ள செனாய் நகரில் அமைந்துள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்த்தார்கள் அங்கும் படிக்கவில்லை. இப்படியே வந்தது தான்.. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, கடைசியில் பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்த அந்த காமெடியை பார்க்கும் போது தான் எனக்கு தெரியும். முதலில் பார்க்கும்போது கூட எனக்கு சூரி என்று தெரியாது. நான் படமே பார்ப்பதல்ல 40 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. அப்போது தான் சொன்னார்கள் அவன் உன்னுடைய மாணவன் தானப்பா ராமசாமி என்றார்கள். சூரி என்கிறார்கள் என்று கேட்டேன். பேரை மாற்றி இருக்கிறான் சூரி என்று, ராம் - லட்சுமணன் என இரட்டையர்கள், இவர்கள் அண்ணன் தம்பி மொத்தம் ஆறு பேர்…” என்ற தமிழரசன் ஐயா அவர்கள், “சில விஷயங்களை சொல்லலாமா சூரியை பற்றி?” என்று கேட்டார்... “உடனே குறுக்கிட்ட சூரி, “இல்லை முதலில் என்னை கேளுங்கள் நான் சொல்கிறேன் எதை சொல்லலாம் வேண்டாம் என்று... அங்கே கேட்காதீர்கள் சார் உலகம் முழுக்க இது போகிறது. பிறகு வெளியில் வந்து ஐயோ இதை அவசரப்பட்டு சொல்லி விட்டேனே என வருத்தப்படக்கூடாது. அதற்காக இப்போதே சொல்லி விடுகிறேன். எனவே நன்றாக யோசித்து போயிட்டு போகிறான் பாவம் என சில விஷயங்களை மட்டும் தட்டி விடுங்கள்” என சூரி கேட்க, “பள்ளிக்கூடத்தில் நல்ல சுறுசுறுப்பாக இருப்பார் ஆனால் கலாட்டா தான். சொல்லும்போது கேட்பார் மற்ற நேரத்தில் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவார். சின்னப் பிள்ளைகளை லேசாக நோண்டி விட்டுவிடுவார்.. அவர்கள் அழுவார்கள்.. என்ன ஆச்சு என்று கேட்டால் ராமசாமி என்னை அடித்து விட்டான் என சொல்வார்கள். அப்புறம் அதற்கும் என்னிடம் இரண்டு அடி வாங்குவார்.” என சொல்ல, தொடர்ந்து அவரிடம், “என்ன விஷயத்திற்காக சேட்டை செய்து அவருக்கு நீங்கள் அதிகமாக அடி கொடுத்திருக்கிறீர்கள்? என கேட்டபோது, “படிக்காததற்கு தான்... படிப்பே வராது.." என சொல்ல, மீண்டும் குறுக்கிட்ட நடிகர் சூரி, "நான் வச்சுக்கிட்டா சார் வஞ்சகம் பண்றேன் வரல சார்" என சொல்ல மீண்டும் கொண்டாட்ட மேடை கலகலப்பானது. இந்த கலகலப்பான முழு வீடியோ இதோ…
 

சினிமா

"சிவகார்த்திகேயனோடு படம் பண்றீங்களா..?"- ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்!-  வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!

தர்பார் - ஸ்பைடர் படங்கள் சரியாக போகாததற்கு காரணம் இதுதான்... உண்மையை உடைத்த ARமுருகதாஸின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

தர்பார் - ஸ்பைடர் படங்கள் சரியாக போகாததற்கு காரணம் இதுதான்... உண்மையை உடைத்த ARமுருகதாஸின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்த அருண் விஜயின் அடுத்த ஆக்ஷன் படத்தில் பெரிய மாற்றம்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்த அருண் விஜயின் அடுத்த ஆக்ஷன் படத்தில் பெரிய மாற்றம்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!