“நான் அப்படி சொல்லவில்லை” நாக சைத்தன்யா குறித்து சமந்தா கருத்து.. – வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த பதிவு இதோ..

நாக சைதன்யா தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமந்தா கருத்து விவரம் இதோ - Samantha About Naga chaitanya Dating rumours | Galatta

தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் ஒரே நேரத்தில் பல முக்கியமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது அவர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான படங்கள் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான ‘சாகுந்தலம்’ படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி உலகெங்கிலும் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக சமந்தா தற்போது விளம்பர பணியில் இருந்து வருகிறார். அதே நேரத்தில் இந்தியில் ‘சிட்டாடேல்’ என்ற ஆக்ஷன் தொடரிலும் தெலுங்கில் ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா அவர்களுடனும் நடித்து வருகிறார்.

சாகுந்தலம் பட விளம்பர பேட்டி ஒன்றில் சமந்தா அவரது முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைத்தன்யா குறித்தும் அவர் தற்போது சோபிதா என்ற நடிகையை காதலித்து வருவதாக கூறப்படுகிறது என்று இது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு சமந்தா, "யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீரில் மூழ்கி விடுவார்கள். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு, அப்பெண்ணை காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் அனைவருக்கும் நல்லது" என்று பதிலளித்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இந்த செய்தியை ரசிகர்கள் ஒருபுறம் வைரலாக்கி வர இதனிடையே சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை பகிர்ந்து அதனுடன் “நான் அப்படி சொல்லவே இல்லையே” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பரவி வந்த வதந்திக்கு சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது சமந்தாவின் விளக்கம் பேசும் பதிவினை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர். நாக சைதன்யா  நடிகை சோபிதாவுடன் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் சமீபத்தில் வெளியானது, இதையடுத்து ரசிகர்கள் நடிகர் நாக சைதன்யா சோபிதா காதலித்து வருவதாக செய்திகளை பரப்பி வந்தனர். ஆனால் இருவரது காதல் குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 

I never said this!! https://t.co/z3k2sTDqu7

— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023

மறைந்தார் பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்.. சோகத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ..
சினிமா

மறைந்தார் பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்.. சோகத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ..

ஒரே படத்தில் அஜித், விஜய்..? கதை ரெடி...ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கும் விளக்கம் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

ஒரே படத்தில் அஜித், விஜய்..? கதை ரெடி...ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கும் விளக்கம் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சினிமா

"சூரிக்கு தாதா சாகேப் பால்கே விருது.. " நெகிழ்ச்சியில் உறைந்த சூரி... – ரியல் வாத்தியார் கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான வீடியோ இதோ..