உலகநாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காளிதாஸ் ஜெயராம்? - வைரலாகும் Glimpse இதோ..

இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் – kalidas jayaram joins shanar indian 2 set | Galatta

தமிழ் சினிமா நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ம் ஆண்டு அட்டகாசமான கதைகளத்தில் வெளியான திரைப்படம் இந்தியன். மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவின் ஆகசிறந்த கமர்ஷியல் திரைப்படமாக வெளியான இந்தியன் 2 திரைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி படப்பிடிப்பு தொடங்க பின் சில அசம்பாவிதங்களாக படம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது  லைகா நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நாடைபெற்று வருகிறது.

படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுல் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும்  இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

ஆந்திரா, திருப்பதி காட்டு பகுதிகள், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப் பட்ட இந்தியன் 2 தற்போது அதன் அடுத்த கட்டமாக தைவான் நாட்டில் படமாகவுள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 1 ம் தேதி படக்குழு இந்தியன் 2 படத்திற்காக தைவான் புறப்பட்டது. தைவானில் கலாச்சார முறைப்படி எரியும் பலூனை பறக்கவிட்டு படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் ஷங்கர் விறுவிறுப்பாக படப்பிடிப்பில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயராம் அவர்களின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் அவர்கள் இந்தியன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சங்கர் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.     இதையடுத்து இணையத்தில் வேகமாக அந்த புகைப்படம் வைரலாகியது மட்டுமல்லாமல் படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிகக்வுள்ளாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

 

 

View this post on Instagram

A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)

காளிதாஸ் ஜெயராஜ் முன்னதாக கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் மூலம் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகனாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரம் அதிகளவு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

ஒரே படத்தில் அஜித், விஜய்..? கதை ரெடி...ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கும் விளக்கம் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

ஒரே படத்தில் அஜித், விஜய்..? கதை ரெடி...ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கும் விளக்கம் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சினிமா

"சூரிக்கு தாதா சாகேப் பால்கே விருது.. " நெகிழ்ச்சியில் உறைந்த சூரி... – ரியல் வாத்தியார் கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான வீடியோ இதோ..

“வெற்றிமாறன் ஆக்ரோஷமா இருந்தால் தான்...” விடுதலை படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் சேத்தன்.. – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ.,
சினிமா

“வெற்றிமாறன் ஆக்ரோஷமா இருந்தால் தான்...” விடுதலை படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் சேத்தன்.. – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ.,