சிலம்பரசன்TRன் விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு குறித்து மனம் திறந்த வாணி போஜன்! வைரல் வீடியோ

விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு குறித்து பேசிய வாணி போஜன்,vani bhojan reveals her chance in vinnaithaandi varuvaaya movie | Galatta

ஆரம்ப கட்டத்தில் பிரபலமான விமான நிறுவனத்தில் பணியாற்றிய நடிகை வாணி போஜன் பின்னர் தமிழ்நாட்டின் சின்னத்திரையில் நடிகையாக களம் இறங்கினார் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் மெகா சீரியலில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் மக்களின் மனதை வென்ற நடிகை வாணி போஜன் தொடர்ந்து சின்னத்துரையின் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கிய நடிகை வாணி போஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த உவமை கடவுளை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த ஹாரர் திரில்லர் படமான மிரள் படங்கள் கதாநாயகியாக நடித்த வாணி போஜன் நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. 

முன்னதாக இயக்குனரும் நடிகருமான M.சசிகுமார் அவர்களுடன் இணைந்து நடித்த பகைவனுக்கு அருள்வாய், பரத்துடன் இணைந்து நடித்த லவ், இயக்குனர் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்த பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் கேசினோ என வாணி போஜன் நடித்த திரைப்படங்கள்  நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதனை அடுத்து பிரபுதேவாவுடன் இணைந்து ரேக்ளா, விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஆர்யன், மற்றும் தமிழ் & தெலுங்கில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக தற்போது வாணி போஜன் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் முழு கவனம் செலுத்தி வரும் வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய வெப் சீரிஸ் செங்களம்.

பொலிட்டிக்கல் திரில்லர் வெப் சீரிஸாக தயாராகி இருக்கும் இந்த வெப் சீரிஸை சுந்தரபாண்டியன், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களின் இயக்குனர் SR.பிரபாகரன் எழுதி இயக்கியுள்ளார். அபி & அபி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த வெப் சீரிஸில் வாணி போஜன் உடன் இணைந்து கலையரசன், சரத் லோகித்தாஸ்வா, விஜய் சந்திரசேகர், மானசா ராதாகிருஷ்ணன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த மார்ச் 24ஆம் தேதி நேரடியாக ZEE5 தளத்தில் வெளியாகிய செங்களம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற நடிகை வாணி போஜன் FANS MEET விழாவில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் ரசிகர்களோடு கலந்துரையாடினார்.

அந்த வகையில், நீங்கள் உள்ளே வரும்போது எங்கள் அணியில் ஒருவர் சொன்னார் நீங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருக்கலாம் அப்படியே ஜெஸ்ஸி லுக்கில் இருக்கிறீர்கள் என சொன்னார்... சொல்லுங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கான நேர்முக தேர்வுக்கு சென்றீர்கள் என சொலுகிறார்களே? எனக் கேட்டபோது, "தேர்வுக்கு நான் செல்லவில்லை... அப்போது விமான நிறுவனத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதில் எந்த கதாபாத்திரம் என்பது எனக்கு தெரியாது. என்னை அழைத்தார்கள்.. "சிலம்பரசன்.TR படம் உங்களை தேர்வுக்காக தொடர்பு கொண்டோம்." என்று சொன்னார்கள் உங்களுக்கு தான் தெரியுமே வீட்டில், "சினிமாவா அய்யய்யோ வேண்டாம் இருக்கிற வேலையை விட்டு விட்டு பறக்கிற வேலைக்கு ஆசைப்பட்ட மாதிரி ஆகிவிடும்" என்று சொன்னார்கள். அப்போதே இல்லை நான் வரவில்லை என தெரிவித்து விட்டேன். ஆனாலும் நான் கௌதம் மேனன் சாரை சந்தித்து விட்டேன் ஓ மை கடவுளே படத்தில் நாங்கள் அவரோடு பணியாற்றினோம்" என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட வாணி போஜனின் அந்த பேட்டி இதோ…

 

'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ
சினிமா

'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ

சினிமா

"சிவகார்த்திகேயனோடு படம் பண்றீங்களா..?"- ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்!-  வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!

தர்பார் - ஸ்பைடர் படங்கள் சரியாக போகாததற்கு காரணம் இதுதான்... உண்மையை உடைத்த ARமுருகதாஸின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

தர்பார் - ஸ்பைடர் படங்கள் சரியாக போகாததற்கு காரணம் இதுதான்... உண்மையை உடைத்த ARமுருகதாஸின் ஸ்பெஷல் பேட்டி இதோ!