உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சக்கிப்போடு போட்டு வரும் திரைப்படம் விக்ரம்.தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படம் போன்ற பல சாதனைகளை இந்த படம் படைத்துள்ளது.OTT-யின் ஆதிக்கம் அதிகம் ஆகிவரும் நேரத்தில் அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு இடையே திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடிவரும் திரைப்படம் விக்ரம்.

இப்படி பல மகுடங்களை சூடிய விக்ரம் படத்திற்கு கலாட்டா சார்பாக ஒரு மகுடம் சூடும் வாய்ப்பு கிடைத்தது.விக்ரம் படத்தின் 50ஆவது நாளை கமல்ஹாசனுடன் கொண்டாடும் அறிய வாய்ப்பு கிடைத்தது.பல பிரம்மாண்ட நிகழ்வுகளை நிகழ்ந்தி வெற்றி கண்ட நமது கலாட்டா குழுவினர் இந்த முறையும் உலகநாயகனின் வெற்றியை கொண்டாடும் வகையில் கோலாகல விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

கலாட்டாவின் விக்ரம் 50ஆவது நாள் விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள பிரபலமான ITC கிராண்ட் சோழாவில் நடைபெற்றது.உலகநாயகனை காணும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் திரள ,அவரிடம் நமது கலாட்டா பிளஸ் தலைமை ஆசிரியர் பரத்வாஜ் ரங்கன் கேள்விகளை எழுப்பினார்.பரத்வாஜ் ரங்கனின் கேள்விகளுக்கு வழக்கம்போல உலகநாயகன் அவரது ஸ்டைலில் பதிலளிக்க,ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

விக்ரம் படத்தின் பெரிய வெற்றி,தனது திரைப்பயணத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்,அரசியல் என்ட்ரி என விக்ரம் படத்தினை தாண்டி தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய விஷயங்களை உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகர்களுடன் ப்ரத்யேகமாக நமது கலாட்டா விக்ரம் 50ஆவது நாள் விழாவில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் கமல்ஹாசன்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த 50ஆவது நாள் விழாவின் முழு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.பல சுவாரசிய தகவல்களை கமல் பகிர்ந்துள்ளார்.அதில் விக்ரம் படம் பார்க்க 80 லட்சம் பேர் தான் வருவார்கள் என வியாபாரத்தில் இருக்கும் பலரும் கூறினார்கள் ஆனால் தமிழகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக 1.5 கோடி பேர் இந்த படத்தினை பார்த்துள்ளனர்.இது வரலாற்று வெற்றி என்று தெரிவித்துள்ளார்.மேலும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்