தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனராக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்ட பீரியட் திரைப்படமாக கே ஜி எஃப்-ஐ கதைக் களமாகக் கொண்டு 3D-ல் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மிக அழுத்தமான அரசியல் கொண்ட வித்தியாசமான கதைக்களத்தோடு அழகிய காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் நகர்கிறது படத்திற்கு கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், டென்மா இசையமைத்துள்ளள்ளார். இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#NatchathiramNagargiradhu in theatres near you from August 31st!@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @thinkmusicindia pic.twitter.com/wZ8dMVljpv

— pa.ranjith (@beemji) August 4, 2022