பல கோடி இந்திய சினிமா ரதிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக திகழும் நடிகை ஹன்சிகா இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் MY3 வெப்சீரிஸ் நடித்துள்ளார். விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் MY3 வெப்சீரிஸ் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி பார்ட்னர் ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் நடித்துள்ள ஃபேண்டசி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.தொடர்ந்து இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஃபேண்டசி ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் புதிய திரைபடத்தில் நடித்து வரும் ஹன்சிகா அடுத்ததாக இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் தயாராகும் ரவுடி பேபி திரைப்படத்திலும் நடிக்கிறார்.

இந்த வரிசையில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா திரைப்படம் கடந்த ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. இயக்குனர் UR.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சிலம்பரசன்.TR முக்கிய வேடத்தில் நடித்துள்ள மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் அவர்கள் தயாரித்துள்ளார்.

மஹா திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நாளை (ஆகஸ்ட் 5) முதல் மஹா திரைப்படம் ஆஹா தமிழ் (aha tamil) OTT தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் மஹா திரைப்படத்திலிருந்து ஹேய் எதிரியே வீடியோ பாடல் சற்று முன்பு வெளியானது. அந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.