பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள மாவீரன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருதுகளை வென்ற மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 3) பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

சூர்யா, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மேடையில் பேச வந்த பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் திரைப்படத்தை நினைவு கூறும் வகையில் சூர்யாவை ரோலக்ஸ்… ரோலஸ்… என அரங்கம் அதிரும் வகையில் அழைத்து உற்சாகப்படுத்தினர். அப்போது நடிகை அதிதி ஷங்கரும் ரோலக்ஸ்… ரோலக்ஸ்.. என சத்தமாக அழைத்தார்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய அதிதி ஷங்கர், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியும் நடனமாடியும் விழாவிற்கு வந்த அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அதிதி ஷங்கரின் இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் இதோ…
 

.@AditiShankarofl Cheering Rolex Rolex 😂❤️🔥 So Cute laa @Suriya_offl#VaadiVaasal #Vanangaan pic.twitter.com/H7DGAskshQ

— R O L E X സൂര്യ 45 (@Tommm_Jerryy) August 3, 2022