ஆகச் சிறந்த நடிகராக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பல மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு (2022) தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம்புலி, இளவரசு, வடிவுகரசி, R.K.சுரேஷ், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படத்திற்கு செல்வக்குமார்.S.K ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேற்று ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சூர்யா, கார்த்தி மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்து பேசினார்கள்.

அப்போது கார்த்தி குறித்து பேசிய நடிகர் சூர்யா "என்னை விட கார்த்தி சிறந்த நடிகர்" என புகழாரம் சூட்டினார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ரோலக்ஸ்-டில்லி என்ற சத்தங்கள் அவ்வப்போது அரங்கத்தை அதிர வைத்து வந்தநிலையில், சூர்யா பேசும்போது “டில்லிய ரோலக்ஸ் என்ன பண்ணலாம்னு சொல்றீங்க” என கேட்க, அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. இதற்கு பதிலளித்த கார்த்தி “டில்லி-ரோலக்ஸ் FIGHT எல்லாம் வீட்டிலேயே நிறையா போட்டோம்” எனக் கூற, மீண்டும் சூர்யா "விரைவில் காலம் பதில் சொல்லட்டும்… வெயிட் பண்ணுவோம்" என தெரிவித்தார். சூர்யா மற்றும் கார்த்தி விருமன் இசை வெளியீட்டில் பேசிய அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.