தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக திகழ்பவர் நடிகை திரிஷா. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பாக பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் இதயங்களில் கொள்ளையடித்தார்.

தொடர்ந்து நடிகை திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அந்த வகையில் சதுரங்க வேட்டை-2 திரைப்படம் நிறைவடைந்தது நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன்-2 திரைப்படமும் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தமிழில் தி ரோட் & மலையாளத்தில் ராம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே த்ரிஷா நடிப்பில் தெலுங்கில் பிருந்தா எனும் வெப் சீரிஸும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடிகர் திரிஷா நடித்த வர்ஷம் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த வர்ஷம் திரைப்படம் தமிழில் மழை என ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. வர்ஷம் திரைப்படத்திற்காக நடிகை திரிஷா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் வென்றார்.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் வர்ஷம் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தில் “நூவஸ்தாணண்டே பாடலுக்கு த்ரிஷா மழையில் நனைந்தபடி நடனமாடும்போது தியேட்டரில் பேப்பர்களை பறக்க விட்டு ரசிகர்கள் கொண்டாடிய வீடியோவை பகிர்ந்து திரிஷா தனது சமூக வலைதளங்களில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். “18 ஆண்டுகளுக்கு கழித்து என் முதல் தெலுங்கு படம் ரீ ரிலீஸ் நேற்றைக்கு நடந்தது போல் தோன்றுகிறது… மீண்டும் 9456743வது முறையாக சொல்கிறேன்… உங்களால் தான் நான்!” என பதிவிட்டுள்ளார். திரிஷாவின் அந்த பதிவு & வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Trish (@trishakrishnan)