மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் படத்தில் நடித்து வரும் மோகன்லால் அடுத்து நடிக்கும் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளிவரவுள்ள மான்ஸ்டர், அலோன், 12th man உள்ளிட்ட திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரைப்படம் ப்ரோ டாடி. முன்னதாக பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப்ரோ டாடி படத்தை பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது.

மோகன்லால் & பிரித்திவிராஜுவுடன் இணைந்து மீனா, கல்யாணி பிரியதர்ஷன், உன்னி முகுந்தன், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், தீபக் தேவ் இசையமைத்துள்ளார். விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாகவுள்ள  ப்ரோ டாடி படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…