தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா முன்னதாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து மலையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, மோகன் லால் நடித்த லூசிஃபர் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிட்ட திரைப்படம் ராக்கி. இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கிய சாணிக் காயிதம் படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரனின் முதல் திரைப்படம் தான் ராக்கி.

இயக்குனர் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராக்கி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்றதோடு தற்போது திரையரங்குகளும் அதிக படுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள திரையரங்கில் ரசிகர்களோடு பார்த்து ரசித்தனர்.  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திரையரங்கில் படம் பார்க்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…