தனது கடின உழைப்பால் தமிழகத்தின் முன்னணி தொழிலதிபராக வலம் வரும் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார். மேலும் தனது தி லெஜண்ட் சரவணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜே.டி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கிய தி லெஜண்ட் திரைப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஊர்வசி ரௌட்டெல்லா, சுமன், நாசர் & பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான தி லெஜண்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தனக்கு எதிராக எரியப்பட்ட அனைத்து எதிர்மறை விமர்சனங்களையும் வெற்றி படிக்கட்டுகளாக்கிய தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி லெஜன்ட் சரவணன் அவர்கள் தனது அரசியல் வருகை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவை தொடர்ந்து அரசியலுக்கு வரும் விருப்பம் உள்ளதா என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “ மக்களும் மகேசனும் தான் முடிவு செய்ய வேண்டும் மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன்” என தி லெஜன்ட் சரவணன் பதிலளித்துள்ளார்.
 

அரசியலுக்கு ”மக்கள் கூப்பிட்டால் வருவேன் !#GalattaNews 📢 #TheLegend #LegendSaravanan #SaravanaStoreLegend pic.twitter.com/iRCGloWvFd

— Galatta Media (@galattadotcom) December 12, 2022