ஒட்டுமொத்த தமிழ் துறை உலகமும் தற்போது மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் தளபதி 67. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி67 திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்த அதிரடியான அப்டேட்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். 

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் இந்த ரயில்கள் தற்போது வலம் வருகின்றன. சென்னை மெட்ரோவில் வாரிசு போஸ்டர்கள் ஓட்டபடும் அந்த ப்ரொமோஷன் வீடியோ இதோ…
 

The Boss Returns 🔥

Chennai Metro Carries #Varisu 🚝🔥#Varisu in theatres near you from Pongal 2023 😊#Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi@iamRashmika @MusicThaman@Jagadishbliss #VarisuPongal 🔥 pic.twitter.com/uLdsSd0xiR

— Seven Screen Studio (@7screenstudio) December 12, 2022