தமிழ்  திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து தற்போது மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.

முன்னதாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக அஜித்குமார்-போனி கபூர்-H.வினோத் மற்றும் நீரவ்ஷா கூட்டணியில் தயாராகி வரும் #AK61 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக #AK61 திரைப்படத்திற்காக செம ஸ்டைலான கெட்டப்பில் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ஐரோப்பாவில் பைக் ட்ரிப் செய்து வரும் அஜித் குமார் ஐரோப்பாவில் அவர் பைக் ரைடிங் செய்த பைக்கின் உரிமையாளருடன் இருக்கும் ஸ்டைலான புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த புகைப்படம் இதோ…

 

Latest Pic Of #AK with Mark Coventry, the owner of bike he used in the Euro trip ! 🏍️#Ajithkumar𓃵 pic.twitter.com/NfEsvhR7eX

— Galatta Media (@galattadotcom) July 10, 2022